அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு எதிரான இறக்குமதி வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ள நிலையில், சீனாவும் அதற்கேற்ப அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியை இடைநிறுத்தியுள்ளது. உலக பொருளாதாரத்தை பாதிக்கும் அளவிற்கு சென்றிருந்த வரி போர் தற்போது ஒரு நேர்மறை மாற்றத்தை நோக்கி நகர்கிறது.

டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், சீனாவுக்கு விதிக்கப்பட்ட 145% வரியை 90 நாட்கள் நிறுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதிலளிக்கையாக சீனாவும் 125% வரியை இடைநிறுத்துவதுடன், 24% கூடுதல் வரியை தவிர்த்துள்ளது. இதன் மூலம், தற்போது அமெரிக்காவுக்குள் சீன பொருட்கள் 30% வரியுடன், சீனாவுக்குள் அமெரிக்க பொருட்கள் 10% வரியுடன் அனுமதிக்கப்படுகின்றன.
இந்த முடிவுகள் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்ற சூழலை உருவாக்கியுள்ளன. வர்த்தக எதிர்மறைகளைத் தவிர்த்து, இரு நாடுகளும் தங்களது பொருளாதார சுமைகளை சமநிலையில் வைத்துக் கொள்வதே தற்போதைய நோக்கமாகத் தெரிகிறது. உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த இரு நாடுகளின் உறவுகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் வாய்ப்பும் இதில் உருவாகியுள்ளது.
சர்வதேச சந்தைகளிலும் இந்த அறிவிப்புகளால் சாதகமான தாக்கங்கள் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். வர்த்தக உறவுகளை நிதானமாக மேம்படுத்தும் வகையில், இந்த 90 நாள் இடைநிறுத்தம் ஒரு முக்கிய கட்டமாகும்.