கனடா: விமான சேவை பாதிப்பு… கனடாவில் பெரிய விமான நிறுவனமான ஏர் கனடாவில் விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதால், விமான சேவை பாதிக்கப்பட்டது.
ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விமானிகள், விமான பணிப்பெண்கள், விமான நிலைய ஊழியர்கள் என சுமார் 10,000 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, ஏர் கனடா நிறுவனத்தின் விமான சேவை நிறுத்தப்பட்டது.
அதுமட்டுமின்றி, விமான சேவை பாதிப்பால் சுமார் 1.3 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பயணச் சீட்டை உறுதி செய்யாமல் விமான நிலையத்துக்கு பயணிகள் செல்ல வேண்டாம் என்று ஏர் கனடா அறிவுறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகளும், விமான நிறுவனத்தின் வலைத்தளம் அல்லது செயலி மூலமாக முழுக் கட்டணத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.