கனடா: கனடாவில் ஆயுதங்களுடன் தந்தை,மகன் இருவர் சிக்கியுள்ளனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கனடாவின் ரொறன்ரோ பகுதியில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட தந்தையும் மகனும் ஆயுதங்களுடன் சிக்கியுள்ள நிலையில், அவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு சார்பில் தொடர்புடைய தந்தையும் மகனும் ரொறன்ரோவில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைதான 62 வயது அகமது எல்டி மற்றும் அவரது மகன் 26 வயது முஸ்தபா ஆகிய இருவரும் தீவிரமான, வன்முறைத் தாக்குதலைத் திட்டமிடுவதில் மேம்பட்ட நிலையில் இருந்தனர் என்றே அறிக்கை ஒன்றில் போலீசார் குறிப்பிட்டுள்ளனர். கனேடிய குடிமக்களான இருவரும் ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவுக்கு வெளியே ரிச்மண்ட் ஹில்லில் உள்ள ஹொட்டல் ஒன்றில் கைது செய்யப்பட்டனர்.
கைதான இருவர் மீதான விசாரணை என்பது ஒரு மாதம் முன்னரே துவங்கப்பட்டதாகவும், அவர்கள் இருவரின் நடவடிக்கைகளை கண்காணித்து, ஞாயிறன்று கைது செய்துள்ளதாக கனேடிய அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.