மதுரை: போதைப் பொருளுக்கு எதிராக மதுரை மாவட்டம் மேலூரில் செயல்படும் தனியார் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
சிவகங்கை சாலையில் துவங்கிய இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மேலூர் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
போதைப் பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகள் அடங்கியவற்றை ஏந்தியபடி மாணவ மாணவியர்கள் ஊர்வலமாக சென்றனர். போதைப் பொருளால் ஏற்படும் தீங்குகள், அதனை தவிர்க்க வேண்டும் என்பது போன்ற விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன.