வளர்சிதை மாற்றம் என்பது உடலில் நடைபெறும் வேதியியல் செயல்முறை. உடல் ஆற்றலை உருவாக்கி கலோரிகளை எரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். 30 வயதிற்குப் பிறகு, தசை எடை குறைவு, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக வளர்சிதை மாற்றம் மெதுவாக ஆரம்பிக்கிறது. இது எடை அதிகரிப்பு, சோர்வு, செரிமான பிரச்சனைகள் மற்றும் நோய் அபாயத்தை அதிகரிக்கும்.

உடல் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த, புரதம் நிறைந்த உணவுகளை உண்பது அவசியம். தினமும் 20–30 கிராம் புரதம் சாப்பிடுவதால் வெப்ப உற்பத்தி அதிகரித்து கலோரிகள் எரியும். எடைப் பயிற்சி, குறைந்தபட்ச வாரத்திற்கு மூன்று முறைகள், மற்றும் சரிவிகிதமான காலை உணவு உடல் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். நீரேற்றம், மன அழுத்த மேலாண்மை, ஆழ்ந்த தூக்கம் ஆகியவையும் முக்கியம்.
பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை குறைக்க, முழுதானியங்கள், பழங்கள், காய்கறிகள், லீன் புரதங்களை சேர்க்க வேண்டும். NEAT (நடைபயிற்சி, படிக்கட்டுகளில் ஏறுதல்) கூட கலோரிகள் எரிக்க உதவும். மசாலாப் பொருட்கள், மிளகாய், இஞ்சி போன்றவை வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுகின்றன. ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரானது செரிமானத்தை மேம்படுத்து, வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும்.
சரியான வாழ்க்கை முறை, உணவு பழக்கம், உடற்பயிற்சி, மன அழுத்த மேலாண்மை மற்றும் போதுமான தூக்கம் பின்பற்றினால், 40 வயதிலும் உங்கள் உடல் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த முடியும். தினசரி சிறு முயற்சிகள், நீர் குடிப்பது மற்றும் ஆரோக்கிய உணவுப் பழக்கங்கள், உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு பெரும் பலன்களை தரும்.