ஜப்பானியர்கள் தங்கள் நீண்ட ஆயுட்காலம் மற்றும் மெலிதான உடலமைப்புக்காக உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக, அவர்கள் பின்பற்றும் சிறந்த உணவுப் பழக்கவழக்கங்கள், பகுதி கட்டுப்பாடு மற்றும் சுறுசுறுப்பான தினசரி வாழ்க்கை கருதப்படுகிறது.
பாரம்பரிய ஜப்பானிய உணவுகள் அதிகம் காய்கறிகள், மீன் மற்றும் மெலிந்த இறைச்சி போன்றவையால் நிரம்பியவை. புரோட்டீன் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய இவை உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகின்றன.

ஜப்பானியர்களின் முக்கிய பழக்கவழக்கங்களில், உணவை மெதுவாக சாப்பிடுவது, தினசரி நடைப்பயிற்சி, “ஹரா ஹச்சி பு” நடைமுறை (80% நிரம்பும் வரை சாப்பிடுதல்), கிரீன் டீ குடிப்பது மற்றும் பருவகால உணவுகளை சாப்பிடுவது அடங்கும். இவை உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதுடன், ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
இந்த பழக்கவழக்கங்கள் உடல் எடையை கட்டுப்படுத்துவதோடு, இதய நோய், புற்றுநோய் போன்ற அபாயங்களை குறைக்கவும் உதவுகின்றன. ஜப்பானியர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை உங்கள் வாழ்க்கை சிலவற்றை பின்பற்றுவதன் மூலம் மேம்படுத்த முடியும்.