இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 7 முதல் 15 வயதுடைய சிறுவர்கள் ஆதார் கார்டில் பயோமெட்ரிக் விவரங்களை பதிவு செய்யும்போது எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் பெற்றோர்களுக்கு பெரிய நிம்மதி கிடைத்துள்ளது.

ஆதார் கார்டு தற்போது வங்கி, கல்வி, அரசுத் துறை மற்றும் நலத்திட்ட சேவைகளில் அவசியமான ஆவணமாக மாறியுள்ளது. இதன் மூலம் பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, செல்போன் எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை புதுப்பிக்க ஆதார் சேவை மையங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கான கட்டணம் அண்மையில் உயர்த்தப்பட்டு, பயோமெட்ரிக் அப்டேட்டிற்கு ரூ.125 மற்றும் பிற விவரங்களுக்கு ரூ.75 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் 2028 செப்டம்பர் வரை அமலில் இருக்கும் என UIDAI அறிவித்துள்ளது. எனினும், குழந்தைகளுக்கான இலவச அப்டேட் சலுகை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை மட்டுமே செல்லுபடியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் ஆதார் விவரங்களை நேரத்தில் புதுப்பிக்கலாம்.
இந்த அறிவிப்பு பல குடும்பங்களுக்கு உதவியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதார் அட்டை தொடர்பான கூடுதல் விவரங்களை UIDAI இணையதளம் மற்றும் அருகிலுள்ள ஆதார் சேவை மையங்களின் மூலம் பெறலாம். இதன் மூலம் குழந்தைகளின் அடையாள விவரங்களை சரியாக பதிவு செய்வது எளிதாகும்.