உலக அளவில் கிராம்பு என்பது வாசனை, சுவை மற்றும் ஃபிளேவருக்காகப் பிரபலமான மசாலா பொருளாகும். பாரம்பரிய மருத்துவத்தில் நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டாலும், சிலர் கிராம்பு எடுத்துக் கொள்ளும்போது எதிர்மறையான விளைவுகளை அனுபவிக்கலாம். இதனால் யாரெல்லாம் கிராம்பு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், பக்க விளைவுகள் என்னென்ன மற்றும் பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள் என்ன என்பதைக் காணலாம்.

கிராம்பு சாப்பிடக்கூடாதவர்கள்:
- குழந்தைகள்: கிராம்பு எண்ணெய் சிறிய குழந்தைகளுக்கு கல்லீரல் சேதம், உடல் திரவ சமநிலையின்மை போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தும்.
- கல்லீரல் நோயாளிகள்: கல்லீரல் பிரச்சனையுள்ளவர்கள் கிராம்பு சப்ளிமெண்ட்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம்; ஹெப்பாட்டிக் நெக்ரோசிஸ் மற்றும் கல்லீரல் என்சைம்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
- ரத்தக்கசிவு பிரச்சனை: ரத்த உறைவு தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்கள் கிராம்பு சாப்பிடும்போது ரத்தக் கசிவு மோசமாகலாம்.
- டயாபடீஸ் நோயாளிகள்: கிராம்பு இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதால் ரத்த சர்க்கரை அளவு மிக மோசமாக குறைய வாய்ப்பு உள்ளது.
- கர்ப்பிணி மற்றும் தாய்ப்பாலூட்டும் பெண்கள்: கிராம்பு மருந்தாக எடுத்துக் கொள்வது குழந்தையின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம்.
- வாய்வழி பிரச்சனைகள் அல்லது அலர்ஜி உள்ளவர்கள்: கிராம்பு எண்ணெய் எரிச்சல், கொப்புளங்கள், தடிப்பு அல்லது வீக்கம் ஏற்படுத்தலாம்.
- இரைப்பை குடல் கோளாறுகள்: அதிக அளவில் கிராம்பு எடுத்து கொள்வது குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்படுத்தும்.
- கல்லீரல் வளர்ச்சிதை மாற்றும் மருந்துகள் எடுத்துக் கொள்வோர்: கிராம்பில் உள்ள யூஜனால் கல்லீரலில் மாற்றங்களை ஏற்படுத்தி பக்க விளைவுகள் உண்டாக்கும்.