சென்னை: தேன் ஓர் மருத்துவ குணம் நிறைந்த இனிய பொருளாகும். இந்த தேனை என்னென்ன பொருட்களில் சேர்த்து பயன்படுத்தினால் நமக்கு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளவோம்.
பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட்டால், நல்ல தூக்கம் வரும். மட்டுமல்லாது இதயம் பலம்பெறும். மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தியாகும், புது இரத்தம் உண்டாகும்.
எலுமிச்சை பழசாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால், இருமல் குணமாகும். ஆரஞ்சு பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால், உடலுக்கு தேவையான இன்சுலின் சுரக்கும். தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல்புண் மற்றும் வாய்ப்புண்கள் மாறும். இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும். கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால், இரத்த சோகை குணமாகும்.
இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழசாறு கலந்து அதனுடன் தேனும் கலந்து அருந்தினால் குமட்டல், வாந்தி, ஜலதோஷம் மற்றும் தலைவலி போன்றவை குணமாகும். இஞ்சி, விதை நீக்கிய பேரீச்சம் பழம் இவற்றுடன் தேனை விட்டு ஊற வைத்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
வெதுவெதுப்பான நீரில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து உண்பது ஹீமோகுளோபின் அளவை உயர்த்தி உடல், மன சோர்வை போக்கும். குறிப்பாக பெண்கள் தினமும் மூன்று வேளை உணவுக்கு முன் இதை அருந்தினால் இரத்த சோகை குணமடையும். பருத்த உடல் இளைக்கும்.