சென்னை: ”போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டை வீசும் அளவுக்கு, குற்றவாளிகளுக்கு சட்டம், காவல் துறை மீது பயம் இல்லாத அளவுக்கு, சட்டம் ஒழுங்கை சீர்குலைத்ததற்காக, முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும். மக்கள் பாதுகாப்புக் கோரும் காவல் நிலையங்கள் கூட பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையம் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டை வீசிய செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.சட்டம் ஒழுங்கு இதைவிட மோசமாகிவிட முடியாது என்று நினைக்கும் ஒவ்வொரு முறையும், இதைவிட மோசமான சம்பவம் இந்த திமுக ஆட்சியில் நடக்கும், சட்டம் ஒழுங்கை சீர்குலைத்ததற்காக, காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு, குற்றவாளிகளுக்கு சட்டம் மற்றும் காவல் துறையின் மீது எந்த பயமும் இல்லை.
மக்கள் பாதுகாப்பு கோரும் காவல் நிலையங்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறியதால், தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், தொழில் முதலீட்டை பராமரிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.