திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் டீசல் திரைப்படக் குழுவினர் சாமி தரிசனம் செய்தனர்.
நாளை வெளியாக உள்ள டீசல் திரைப்படம் வெற்றியடைய வேண்டி கதாநாயகன் ஹரிஷ் கல்யாண், நாயகி அதுல்யா ரவி உள்ளிட்டோர் திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்தனர்.
கோயிலுக்கு வெளியே வந்த ஹரிஷ் கல்யாண் மற்றும் அதுல்யா ரவியுடன் ரசிகர்கள் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.