ராஞ்சி: ஜார்க்கண்டின் ராஞ்சி மாவட்டத்தில் உள்ள கான்கே, ஆர்சந்தே மற்றும் துர்வா உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பசு சாண விளக்குகளை தயாரிக்கின்றன. இந்த விளக்குகள் ஒவ்வொன்றும் ரூ. 10 முதல் ரூ. 15 வரை விற்கப்படுகின்றன.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இந்த விளக்குகள் கிராமப்புற பெண்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளன. கான்கே நகரில் ஒரு பசு சாணக் கடையை நிர்வகிக்கும் சோனாலி மேத்தா, “எங்கள் கடையில் சுமார் 100 பெண்கள் பசு சாண விளக்கு தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

இங்கு தினமும் 7,000 விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகைக்காக வாரணாசியிலிருந்து 3 லட்சம் விளக்குகளுக்கான ஆர்டரைப் பெற்றுள்ளோம்.
ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு நாளும் 400 விளக்குகளை தயாரிக்கலாம். அவர்களுக்கு ஒரு விளக்குக்கு 0.75 பைசா கிடைக்கிறது” என்றார்.