அமெரிக்கா: ஈரான் போரில் இருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறக் கோரும் தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது. இது அதிபர் டிரம்புக்கு அரசியல் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் 1973-ம் ஆண்டின் போர் அதிகாரங்கள் தீர்மானச் சட்டத்தின்படி, அதிபர் பாராளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி 60 நாட்கள் வரை ஒரு நாட்டின் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். அதற்கு மேல் போரைத் தொடர பாராளுமன்ற ஒப்புதல் அவசியம்.
ஈரான் மீதான போரை டிரம்ப் தொடங்கிய நிலையில், 60 நாள் காலக்கெடு முடிந்துவிட்டதாகவும், அவர் சட்டத்தை மீறுவதாகவும் ஜனநாயகக் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த சூழலில், அமெரிக்கப் படைகளை ஈரானில் இருந்து திரும்பப் பெறக் கோரும் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்டது. வாக்கெடுப்பில் 215 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 208 பேர் எதிராகவும் வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேறியது.
இந்த தீர்மானம் சட்டமாக அமலுக்கு வர செனட் சபையின் ஒப்புதலும் தேவை. இருப்பினும், இது டிரம்புக்கு அரசியல் பின்னடைவாக கருதப்படுகிறது.