வாஷிங்டன்: இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான பதற்றத்தை குறைக்கும் நோக்கில் அமெரிக்காவில் புதிய சுற்று நேரடி பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.
வாஷிங்டனில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் யெச்சியல் லீட்டர், லெபனான் தூதர் நடா ஹமதே மோவாட் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இது இரு தரப்புக்கும் இடையிலான நான்காவது நேரடி பேச்சுவார்த்தையாகும். இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த சந்திப்பு, சமீபத்திய தாக்குதல்களுக்கு பின்னர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அண்மையில் லெபனான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தை அமைதிக்கான புதிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.