வாஷிங்டன்: லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே புதிய போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பெய்ரூட்டை நோக்கி முன்னேறிய இஸ்ரேல் படைகள் திரும்ப அழைக்கப்பட்டதாகவும், ஹிஸ்புல்லா அமைப்பும் அனைத்து தாக்குதல்களையும் நிறுத்த ஒப்புக்கொண்டதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்த உடன்பாடு மத்திய கிழக்கு பகுதியில் பதற்றத்தை குறைக்கும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.