உத்தரபிரதேசம்: பெண்ணுக்கு ஆயுள்… உத்தரப் பிரதேச மாநிலத்தில் கணவர் மீது அமிலம் வீசி நிரந்தர பார்வையிழப்பை ஏற்படுத்திய பெண்ணுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கஹ்கன்ஷா என்ற பெண், தனது கணவர் முசாஃபர் உறங்கிக் கொண்டிருந்தபோது ஆசிட் ஊற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. தாக்குதலின் காரணமாக அவரது முகம் கடுமையாக சேதமடைந்ததுடன் இரு கண்களிலும் பார்வை இழந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.1.75 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.