வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்திய லாரி டிரைவர்கள் ‘ஆப்பரேஷன் செக்மேட்’ நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்புப் பிரிவு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
அரிசோனா மாகாணத்தில் நடைபெற்ற சோதனையில் 52 பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பது கண்டறியப்பட்டது. இதில் 36 பேர் வணிக லாரிகளை இயக்கிக் கொண்டிருந்தபோது பிடிபட்டனர்.
கைது செய்யப்பட்ட 36 பேரில் 30 பேர் இந்தியர்கள். மீதமுள்ளோர் மெக்சிகோ, ரஷ்யா மற்றும் எல் சால்வடார் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
சட்டபூர்வ ஆவணங்கள் இல்லாத காரணத்தால் கைது செய்யப்பட்ட அனைவரையும் அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.