வாஷிங்டன்: அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட 17,100 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியுதவி திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
அரசு அமைப்புகள் மற்றும் சட்டங்களை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி பழிவாங்கப்படுவோருக்கு உதவும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த நிதி, 2021 ஜனவரி 6ம் தேதி அமெரிக்க பாராளுமன்ற வளாக முற்றுகை சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு வழங்கப்படலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, டிரம்பின் குடியரசு கட்சியினரிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. பல வழக்குகளும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளதால் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.