திருவனந்தபுரம்: தற்போதைய சூழலில் கேரளாவின் மிகப்பெரிய சவால் போதைப்பொருள் பரவல்தான் என்று அம்மாநில முதல்வர் சதீசன் தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது பெரும் கவலையளிப்பதாக அவர் கூறினார்.
மக்கள் தொகையில் 50 முதல் 60 சதவீதம் வரையிலான இளைஞர்கள் போதைப்பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பதற்கும் இதுவே முக்கிய காரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை ஒழிக்க காவல்துறை மற்றும் கலால்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்றும், அதற்கு அரசு முழு ஆதரவு வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.