நாமக்கல்: புதிய வீட்டிற்கு வரி விதிக்க லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வருவாய் உதவியாளர் மற்றும் தற்காலிக பணியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் சிலுவம்பட்டியை சேர்ந்த பூபதி, தனது புதிய வீட்டிற்கு வரி விதிக்க விண்ணப்பித்திருந்தார். இதற்காக மாநகராட்சி வருவாய் உதவியாளர் உதயகுமார் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் ரூ.15 ஆயிரமாக குறைக்கப்பட்ட நிலையில், முதல் தவணையாக ரூ.7 ஆயிரம் வழங்கப்பட்டது. மீதமுள்ள ரூ.8 ஆயிரத்தை வழங்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
லஞ்ச பணத்தை பெற்ற உதயகுமார், அதை தற்காலிக தூய்மை பணியாளர் கலாவிடம் கொடுத்தபோது இருவரும் கைது செய்யப்பட்டனர்.