கோவை மாநகராட்சியில் தி.மு.க., ஆட்சியில் நடந்த தவறுகள் தற்போது வெளிச்சத்துக்கு வருகின்றன. ரூ.3.36 கோடியில் கட்டிய முதல்வர் படைப்பகத்தில், டெண்டர் கோராமல், ரூ.1.35 கோடியில் கூடுதல் பணிகள் ‘அட்வான்ஸ் ஒர்க்’ என்ற முறையில் செய்தது தெரியவந்துள்ளது. பல வேலைகள் டெண்டர் இல்லாமல் செய்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவை கேட்டு, ‘அட்வான்ஸ் ஒர்க்’ செய்த ஒப்பந்ததாரர்கள், செலவழித்த பணத்தை எப்படி மீட்டெடுப்பது என தெரியாமல் முழிக்கின்றனர்.