‘அமரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் தனுஷின் 55வது படத்தை இயக்கி வருகிறார். முக்கிய வேடத்தில் மம்முட்டியும், நாயகிகளாக சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோரும் நடிக்கின்றனர். ஆர்டேக் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தனுஷூம் தயாரிக்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு ‘ஓம்’ என பெயரிட்டு முதல் பார்வை போஸ்டர் மற்றும் அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளனர். படம் வரும் அக்., 16ல் ரிலீஸ் எனவும் அறிவித்துள்ளனர்.