புதுடில்லி: தம்பதியரில் ஒருவர் நியாயமான காரணமின்றி தாம்பத்திய உறவை தொடர்ந்து புறக்கணிப்பது விவாகரத்து பெற வலுவான காரணியாக அமையும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்த மருத்துவர் தம்பதியர் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.
15 ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதையும், சமரச முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்ததையும் கருத்தில் கொண்டு, திருமண உறவை தொடர்வதில் பயன் இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது.
அரசியல் சாசன சட்டம் 142-ன் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி திருமண உறவை உடனடியாக ரத்து செய்தது.