மேற்கு வங்கம்: சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு புதிய சிக்கல்கள் உருவாகியுள்ளன.
முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும், அரசியல் வாரிசுமான அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல் நடந்ததாக கூறப்படும் நிலையில், மம்தா பானர்ஜி தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டினார்.
ஆனால் அந்த கூட்டத்தில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களில் 20 பேர் மட்டுமே பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள 60 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.
இதனைத் தொடர்ந்து கட்சிக்குள் இருந்த பல அமைப்புகளை மம்தா பானர்ஜி கலைத்துவிட்டதாக கூறப்படுகிறது.