By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள்
    1 Min Read
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்க மறக்காதீங்க!!
    1 Min Read
    ரெடிமேட் உணவுகளை சாப்பிடும் முன் யோசிங்க!
    1 Min Read
    அதிகளவு உடற்பயிற்சியை அதிக நேரம் செய்பவர்களா நீங்கள்… அப்போ இது உங்களுக்காக!!!
    1 Min Read
    புயல் எச்சரிக்கையை முன்கூட்டியே கண்டறிய ஏஐ தொழில்நுட்பம்… மத்திய அமைச்சர் தகவல்
    1 Min Read
    கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்
    2 Min Read
    உடல் சூட்டை தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பேயன் வாழைப்பழம்!
    2 Min Read
    நுங்கு-ல் உள்ள மருத்துவக்குணங்கள்… இனி இதுதான் நமக்கு தேவை!!!
    1 Min Read
    உங்களின் கம்பீரத்தை உயர்த்த சரியான ஆடைகளை அணியுங்கள்…
    1 Min Read
    கால்களுக்கு இயற்கை அழகு தரும் கொலுசு… எப்படி எடுப்பது?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: வெள்ளை மாளிகை அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம்: அதிபர் டிரம்ப் கடும் கோபம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > வெள்ளை மாளிகை அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம்: அதிபர் டிரம்ப் கடும் கோபம்
உலகம்

வெள்ளை மாளிகை அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம்: அதிபர் டிரம்ப் கடும் கோபம்

Nagaraj
Last updated: November 27, 2025 6:42 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

அமெரிக்கா: தாக்குதல் நடத்திய மிருகம் பெரிய விலையைக் கொடுக்கும் என்று துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து உச்சகட்ட கோபத்தில் அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிசூடு நடத்தினார்.

இந்த தாக்குதல் வெள்ளை மாளிகையின் வடமேற்கே உள்ள ஒரு மெட்ரோ நிலையம் அருகே நடந்தது. இதில் மேற்கு வர்ஜீனியாவை சேர்ந்த தேசிய காவல்படையின் 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

முதலில் பெண் காவலர் மீது துப்பாக்கிசூடு நடத்திய அந்த வாலிபர் பின்னர் மற்றொரு காவலரையும் சுட்டுள்ளார். உடனே மற்ற பாதுகாப்பு படை வீரர்கள், தாக்குதல் நடத்திய நபர் மீது துப்பாக்கியால் சுட்டு அவரை மடக்கி பிடித்தனர்.

படுகாயம் அடைந்த 2 பாதுகாப்பு படை வீரர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 29 வயதான ரஹ்மானுல்லா லகன்வால் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

போலீசார் சுட்டதில் ரஹ்மானுல்லாவுக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தாலும் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் நிலவிய குழப்பமான சூழலின்போது அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தவர் என்றும் அப்போதைய அதிபர் ஜோபைடன் நிர்வாகத்தின் திட்டமான ஆபரேஷன் அல்லீசஸ் வெல்கம் மூலம் அமெரிக்காவிற்குள் நுழைந்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் துப்பாக்கிசூடு நடத்திய காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

துப்பாக்கிச்சூடு நடந்த போது வெள்ளை மாளிகை யில் அதிபர் டிரம்ப் இல்லை. அவர் புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ பண்ணை வீட்டில் இருந்தார். இச்சம்பவத்துக்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, துப்பாக்கி சூடு சம்பவம் நமது சிறந்த தேசிய காவல்படை வீரர்கள் மீதான கொடூரமான தாக்குதல் ஆகும். தாக்குதல் நடத்திய நபர் ஒரு மிருகம். அவர் காயமடைந்திருந்தாலும் அந்த மிருகம் மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும். இது ஒரு தீய, வெறுப்பு மற்றும் பயங்கரவாத செயல். முந்தைய ஜோபைடன் நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவர்களை சரியாக ஆய்வு செய்யவில்லை என்றார்.

இதற்கிடையே வாஷிங்டன் நகரத்துக்கு மேலும் 500 தேசிய பாதுகாப்புப் படை வீரர்களை அனுப்புமாறு பாதுகாப்புச் செயலாளருக்கு டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.

You Might Also Like

துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள்

கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு

விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்

ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு

தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு

TAGGED:Afghan teenagerInvestigationorderoutragePresident TrumpShootingஅதிபர் டிரம்ப்ஆப்கானிஸ்தான் வாலிபர்ஆய்வுஉத்தரவுகடும்கோபம்துப்பாக்கிச்சூடு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?