சென்னை: ப்ளாக் டீயிலுள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம். உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் இதில் எத்தனை நன்மைகள் இருக்கிறது என்பது தெரியுமா!!!
4 பேர் வீட்டுக்கு வந்தாலோ அல்லது வெளியே சென்றாலோ முதலில் கேட்பதும், கொடுப்பதும் டீ தான். டீ என்பது பல்வேறு கலாசாரங்களுடன் இணைந்த ஒன்று. இப்படிப்பட்ட டீயில் பல்வேறு வகைகள் இருக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து நுணுக்கமான கைதேர்ந்த தேயிலைகளைக் கொண்டு தயாரிக்கப்படுபவை இவை.
இந்தியாவிலும் டார்ஜிலிங் டீ, அசாம் டீ போன்றவை அவற்றின் சுவை மற்றும் மணத்திற்காகவே மிகவும் பிரபலமடைந்திருக்கிறது. ’’கட்டன்சாய்’’என்று அழைக்கப்படுகிற ப்ளாக் டீ, உலகின் பல்வேறு பகுதிகளில் பிரபலமானது. இந்த டீயை வைத்து பல்வேறு வகை டீயை உருவாக்கலாம். இந்த பானம் சுவைக்காக மட்டுமல்ல; இதில் பல்வேறு ஆரோக்கிய குணங்களும் அடங்கியிருக்கிறது.
ப்ளாக் டீயிலுள்ள நன்மைகள்: ப்ளாக் டீ இதயத்திற்கு நல்லது. ப்ளாக் டீயில் ஃபிளாவனாய்டுகள் இருப்பதால் இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்த அழுத்தத்துடன், கொழுப்பு மற்றும் ட்ரைக்ளிசரைடுகளை குறைப்பதால் இதய நோய்கள் வராமல் இருக்க உதவுகிறது.
கொழுப்பை குறைக்கிறது. ரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்புகளை ப்ளாக் டீ குறைக்கிறது. உடலில் இரண்டு வகை கொழுப்புகள் உள்ளன. அவை உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் அல்லது நல்ல கொழுப்பு மற்றும் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் அல்லது கெட்ட கொழுப்பு (LDL) என்று அழைக்கப்படுகிறது. இந்த கெட்ட கொழுப்பானது தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தும் என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்ததே. எனவே இந்த கெட்ட கொழுப்பை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.
குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. ப்ளாக் டீயில் பாலிஃபெனால்கள் இருக்கிறது. இந்த பாலிஃபெனால்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்கள் வளர்வதை ஊக்குவித்து, கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கிறது.