By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    மியான்மரில் உள்நாட்டு போர்: ராணுவத்தின் கை மீண்டும் ஓங்குகிறது
    1 Min Read
    சிறுவனை கடத்திய வழக்கில் கனடாவில் இந்தியருக்கு சிறை தண்டனை
    1 Min Read
    ஆட்கள் நீக்கமா? இன்போசிஸ் தலைமை அதிகாரி கொடுத்த விளக்கம்
    1 Min Read
    ஹார்முஸ் நீரிணையை திறக்க என்ன செய்யலாம்… அதிபர் டிரம்ப்பின் அடுத்த திட்டம்
    1 Min Read
    ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது… அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை உயர்வு… மத்திய அரசு அதிரடி
    1 Min Read
    திருமண இசை கச்சேரியால் 140 கோழிகள் பலி… போலீசில் புகார்
    2 Min Read
    அன்றாடம் சாப்பிடும் எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரங்களில் ஜீரணமாகும் ?
    1 Min Read
    மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து புதுச்சேரி கலெக்டர் தகவல்
    2 Min Read
    தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? மத்திய அரசு விளக்கம்
    3 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி
    1 Min Read
    நெயில் பாலிஷ் போட்டதும் உடனே காய வைப்பது எப்படி ?
    1 Min Read
    சருமத்தை இளமையாகவும், பொலிவுடனும் வைத்துக்கொள்ளும் ஸ்பூன் மசாஜ்
    2 Min Read
    எண்ணெய் சருமம் கொண்டவர்கள் சரும பராமரிப்பில் செய்யும் தவறுகள்
    1 Min Read
    ஊட்டசத்து மிகுந்த தக்காளி டோஸ்ட் செய்வது எப்படி?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மலைப்பிரதேசங்களின் ராணி ஊட்டி… கண்டிப்பாக சுற்றுலா செல்ல வேண்டிய ஸ்தலம்!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சுற்றுலா > மலைப்பிரதேசங்களின் ராணி ஊட்டி… கண்டிப்பாக சுற்றுலா செல்ல வேண்டிய ஸ்தலம்!
சுற்றுலா

மலைப்பிரதேசங்களின் ராணி ஊட்டி… கண்டிப்பாக சுற்றுலா செல்ல வேண்டிய ஸ்தலம்!

Nagaraj
Last updated: December 31, 2025 5:34 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: நீலகிரி மலையின் மேல் உள்ள ஒரு அழகிய ஊர் உதகமண்டலம். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுருங்கி ஊட்டி என்றானது. இந்த அழகிய மலைப்பிரதேசதிற்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். ஊட்டியைச் சுற்றிலும் அமைந்துள்ள ‘புளூ மவுண்டைன்’ எனப்படும் நீலகிரி மலையே ஊட்டிக்கு அழகு சேர்க்கிறது.

நீலகிரி என்ற பெயருக்கு பல காரணக் கதைகள் உண்டு. 12 வருடங்களுக்கு ஒரு முறைப் பூக்கும் நீல நிறம் கொண்ட குறிஞ்சிப் பூ, இங்கு பூத்துக் குலுங்கும் போது, மலை முழுதும் நீல நிறமாக காட்சி அளிப்பதால் தான் இந்தப் பெயர் வந்தது என்று சிலர் கூறுகின்றனர். இந்த மலையில் படர்ந்துள்ள யுகலிப்டஸ் மரத்திலிருந்து வரும் புகை நீல நிறத்தில் இருப்பதால் தான் இந்தப் பெயர் வந்தது என்றும் சொல்லப்படுகிறது.

ஊட்டியின் கலாச்சாரம், கட்டமைப்பு போன்றவற்றில் ஆங்கில அரசின் தாக்கத்தை இன்று கூட காணலாம். ஊட்டி , இங்கிலாந்து நாட்டின் ஒரு கிராமத்தைப் போல இருப்பதாக பல சுற்றுலா பயணிகள் கருதுகின்றனர். ஊட்டியின் அழகில் மயங்கிய ஆங்கிலேயர், ஊட்டிக்கு ‘மலைப்பிரதேசங்களின் ராணி’ என்று பெயர் சூட்டினார்கள். தென்னிந்தியாவின் பிற ஊர்களில் வெப்பத்தை அனுபவித்த ஆங்கிலேயர்கள், ஊட்டியைக் கண்டதும் பொக்கிஷத்தைக் கண்டதுபோல் மகிழ்ந்தனர்.

ஊட்டியில் உள்ள சில கட்டடங்கள் அந்தக் கால வடிவமைப்புடன் இருப்பதால், இந்த ஊரே ஒரு பழமைத் தோற்றத்துடன், பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இதன் வளர்ச்சி ஆங்கில ஆட்சியிலிருந்துத் தொடங்கியது. நவீன உலகிற்கு, ஊட்டியின் வரலாறு ஆங்கிலேயர்கள் குடியேறிய சமயத்திலிருந்து தொடங்குகிறது. கட்டிடங்களின் வடிவமைப்பு மற்றும் வீடுகளின் கட்டுமான பாணி அனைத்தும் பிரிட்டிஷ் காலத்தை நினைவூட்டுவதாக உள்ளது.

பிரிட்டிஷ் பண்பாடும் நடைமுறைகளைகளும் உள்ளூர் மக்கள் வாழ்வில் ஆழமாக பதிந்து இருக்கிறது. உள்ளூர் உணவில் கூட ஆங்கில உணவுகளின் தாக்கம் தெரிகிறது. இதன் விளைவாக, ஊட்டியின் சிறந்த உணவில், பிரிட்டிஷ் மற்றும் இந்திய மசாலாக்களின் சுவையை காணலாம். பிரிட்டிஷ், உள்ளூர் உழைப்பாளி மக்களுடன் சேர்ந்து செய்த வளர்ச்சிப் பணி தான், ஊட்டி இன்று புகழ் பெற உதவியது.

பொட்டானிக்கல் கார்டன், தொட்டபெட்டா மலைச் சிகரம், ஊட்டி ஏரி, கல்ஹத்தி நீர்வீழ்ச்சி மற்றும் மலர் கண்காட்சி போன்ற காரணங்களால், உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மத்தியில், ஊட்டி மிகவும் பிரபலமாக உள்ளது. ஊட்டியைச் சாலை மற்றும் ரயில் வழியாக எளிதில் அடைய முடியும். நெருங்கிய விமான நிலையம் கோயம்புத்தூரில் உள்ளது. ஊட்டியில் ஆண்டு முழுவதும் இனிமையான சூழல் நிலவுகிறது. எனினும், குளிர்காலத்தில், வழக்கத்தை விட சற்று குளிராகவே இருக்கும்.

You Might Also Like

ஊட்டியில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான மலர் தொட்டிகள் தயார்

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நைனி ஏரி

கேரளாவிற்கு சென்றால் இந்த இடங்களை மிஸ் செய்யவே கூடாது

புகைப்பட ஆர்வலர்களுக்கு ஏற்ற தென்னிந்திய சீரப்புஞ்சி வால்பாறை!

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல ஆசையா?

TAGGED:Botanical GardenhillsOotytourismWaterfallஊட்டிசுற்றுலாபொடானிக்கல் கார்டன்மலைப்பிரதேசம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
இந்தியா

சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை உயர்வு… மத்திய அரசு அதிரடி

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?