By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு
    1 Min Read
    துபாயில் கோர விபத்து: இந்திய தொழிலாளர்கள் உயிரிழப்பு
    1 Min Read
    அரபிக்கடலில் தாக்குதல்: 24 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு
    1 Min Read
    நேர்காணலை பாதியில் நிறுத்திய டிரம்ப்… என்.பி.சி. தொகுப்பாளருடன் கடும் வாக்குவாதம்!
    1 Min Read
    ஹோர்முஸ் ஜலசந்தி அருகே 4 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: அமெரிக்கா தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    இந்தியா – இந்தோனேசியா உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை… மோடி பயணத்திற்கு முன் முக்கிய சந்திப்பு!
    1 Min Read
    நடிகர் சலீம் குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்… “மறக்க முடியாத கலைஞர்” என புகழாரம்!
    1 Min Read
    அமெரிக்காவில் தெலுங்கானா இளைஞர் சுட்டுக்கொலை… உடலை இந்தியா கொண்டு வர குடும்பம் கோரிக்கை!
    1 Min Read
    கடும் வெயில் எதிரொலி… தெலுங்கானாவில் பள்ளிகள் திறப்பு ஜூன் 15-க்கு ஒத்திவைப்பு!
    1 Min Read
    திருமணத்திற்குப் பிறகு கணவரிடம் உண்மையை கூறிய இளம்பெண்… 6 ஆண்டுகள் பழைய பாலியல் வழக்கில் நடவடிக்கை!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்: தெற்கு ரெயில்வேக்கு ஐகோர்ட்டு உத்தரவு
    1 Min Read
    கீழடியில் ‘ட’ வடிவ செங்கல் சுவர் கண்டுபிடிப்பு
    1 Min Read
    பழனி கோவிலில் ரூ.1 கோடிக்கும் மேற்பட்ட பணிகள் திறப்பு: அமைச்சர் ரமேஷ் ஆய்வு
    1 Min Read
    “காவல் நிலையங்கள் தூய்மையாக இருக்க வேண்டும்”… சென்னை கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!
    1 Min Read
    ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை நாளை தொடக்கம்?… பெண்கள் பாதுகாப்புக்கான புதிய திட்டம்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தைப்பட்டத்தை தவறவிடாமல் நெல்லுக்கு பின் உளுந்து விதைப்பது உத்தமம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > விவசாயம் > தைப்பட்டத்தை தவறவிடாமல் நெல்லுக்கு பின் உளுந்து விதைப்பது உத்தமம்
விவசாயம்

தைப்பட்டத்தை தவறவிடாமல் நெல்லுக்கு பின் உளுந்து விதைப்பது உத்தமம்

Nagaraj
Last updated: January 11, 2026 5:20 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

சென்னை: தைப்பட்டத்தை தவறவிடாமல் நெல்லுக்கு பின் உளுந்து விதைப்பது உத்தமம் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறை உன்னதமான ஆலோசனையை வழங்கி உள்ளது.

காவிரி பாசனப் பகுதியில் சம்பா மற்றும் தாளடி அறுவடைக்கு பின் மண்ணில் இருக்கும் ஈரம் மற்றும் காற்றில் உள்ள பனி ஈரப்பதத்தினை கொண்டு எந்தவித நில தயாரிப்பு இல்லாமல் நல்ல மகசூல் எடுக்கும் வாய்ப்பு தைப்பட்ட தரிசு நில உளுந்து சாகுபடியில் உள்ளது. எனவே தைப்பட்டத்தை தவறவிடாமல் உளுந்து, பச்சை பயிறு சாகுபடி செய்யுங்கள் என தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா தெரிவித்துள்ளார்.

நெல்லுக்குப் பின் பயறு வகை பயிர் சாகுபடியில் உற்பத்தி திறன் குறைவுக்கு பருவம் தவறி விதைத்தல், உற்பத்தி திறன் குறைந்த விதைகளை பயன்படுத்துதல் பயிர் எண்ணிக்கையை சரிவர பராமரிக்காதது, களை நிர்வாகத்தை கவனிக்காமல் விடுவது, பயிர் வளர்ச்சி ஊக்கிகளை பயன்படுத்தாமல் இருப்பது, பூக்கும் தருணம் மற்றும் காய்கள் வளர்ச்சி அடையும் தருணங்களில் வறட்சி நிலவுவது, சரியான தருணத்தில் பூச்சி மற்றும் நோய்களை கண்டறிந்து பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது போன்றவை காரணங்கள் ஆகும்.

எனவே புரதச்சத்து தேவையை பூர்த்தி செய்யவும், அதிக விளைச்சலைப் பெறவும் தகுந்த தொழில் நுட்பங்களை கையாள்வது அவசியம்.

சாகுபடி பருவம்: நெல் தரிசில் சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்குப் பிறகு மார்கழி மற்றும் தை மாதங்களில் பயறு வகை பயிர்களான உளுந்து, பச்சை பயிறு சாகுபடி செய்யலாம். இதற்கு உளுந்து ஆடுதுறை- 3, 5, 6, வம்பன்- 6, 8 சிறந்த ரகங்கள் ஆகும்.

பயிர் எண்ணிக்கை: பயிர் வகை சாகுபடியில் பயிர் எண்ணிக்கையை பராமரித்தால் பல மடங்கு மகசூல் கூடும். எனவே ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவில் விதைக்க வேண்டும். இதற்காக விதை நேர்த்தி செய்வது சிறப்பான ஒன்றாகும். ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பெண்டசிம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி உயிர் பூஞ்சாணம் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்கவும். இதன் மூலம் விதை வழியாக பரவும் நோய்களை கட்டுப்படுத்தலாம்..

நுண்ணுயிர் விதை நேர்த்தி: ஒரு ஏக்கருக்கு தேவையான விதைக்கு ஒரு பொட்டலம் (200 கிராம்) ரைசோபியம் நுண்ணுயிர் உடன் 500 மில்லி ஆறிய கஞ்சி கலந்து விதையுடன் சேர்த்து நன்கு பிசைந்து 15 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும், பூஞ்சாண விதை நேர்த்தி செய்து 24 மணி நேரத்திற்கு பிறகு விதைப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு இதை செய்ய வேண்டும்.

ரைசோபியம் கொண்டு விதை நேர்த்தி செய்வதால் வேர் முடிச்சுகளில் காற்றில் உள்ள தழைச்சத்து மண்ணில் நிலை நிறுத்தப்பட்டு விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

விதைப்பு:
சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைக்கு முன் 3 முதல் 4 நாட்களில் காவிரி ஆற்றுப் பாசன பகுதியில் நெல் தரிசு உளுந்தை ஏக்கருக்கு 12 கிலோ என்கிற அளவில் மெழுகு பதத்தில் விதைப்பு செய்ய வேண்டும் மண்ணில் ஈரம் அதிகமாக இருப்பின் செயின் பொருத்திய அறுவடை இயந்திரமும் அல்லது மண் ஈரப்பதமாக இருந்தால் டயர் சக்கரம் பொருந்திய அறுவடை இயந்திரமும் பயன்படுத்தலாம்.

களை நிர்வாகம்:

நெல் தரிசு பயறு வகை பயிர்களின் ஆரம்ப கால வளர்ச்சி பருவத்தில் 30 நாட்கள் வரை பல்வேறு களைகள் போட்டியிட்டு மகசூலை பாதிப்பதால் களை நிர்வாகம் இன்றியமையாதது. நெல் தரிசு பயிரில் விதைத்த 18 – 20 ம் நாள் குயிஸலாபாப் ஈத்தைல் என்ற களைக்கொல்லியை ஏக்கருக்கு 400 மில்லி (ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மில்லி அளவில்) தெளிப்பதால் வயலில் உள்ள புல் வகை களைகள், நெல் மறு தாம்பு பயிர் மற்றும் அறுவடையின் பொழுது விழுந்து முளைத்த நெல் நாற்றுக்கள் நன்கு கட்டுப்படுத்தப்படுவதால் உளுந்து பயிருக்கு மண்ணில் உள்ள எஞ்சிய ஈரம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.

You Might Also Like

தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும்

பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அடங்கிய இளநீரின் பயன்கள்

பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அடங்கிய இளநீரின் பயன்கள்

குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுப்பது… உங்களுக்கான விளக்கம்

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நிறைந்த பேரிச்சம் பழம்!

TAGGED:nutrientsrice seedlingsSoilSorghumUrad dalஉளுந்து பயறுஊட்டச்சத்துக்கள்தைப்பட்டம்நெல் நாற்றுகள்மண்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

நெல் சேமிப்பு மற்றும் கொள்முதல் மையங்களில் அமைச்சர் ர.வினோத் திடீர் ஆய்வு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?