சென்னை: எந்த ஒரு கட்சியும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது என்றும், வரும் தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும் தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அ.ம.மு.க. யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள பா.ஜ.க. மாநாட்டு பதாகையில் டி.டி.வி.தினகரனின் புகைப்படம் இடம் பெற்றிருந்ததால், அவர் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துவிட்டாரா என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து விளக்கிய தினகரன், யாரோ ஆர்வத்தில் தனது புகைப்படத்தை வைத்துள்ளதாகவும், கூட்டணி குறித்த முறையான அறிவிப்பை உரிய நேரத்தில் தலைமை அறிவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு கட்சியும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது என்றும், வரும் தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும் தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அ.ம.மு.க. இடம் பெறும் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் எனக் குறிப்பிட்ட அவர், தாங்கள் வேறு ஒரு கூட்டணியில் சேரும் பட்சத்தில் அக்கூட்டணியின் தலைமை அதை முறைப்படி அறிவிக்கும் என்று கூறியுள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஏற்படுத்தப்போகும் தாக்கம் ஒருபுறம் இருக்க, தினகரனின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.