தஞ்சாவூர்: இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கும் வகையில் தஞ்சையில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
தமிழக அரசு இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அதன் ஒரு பகுதியாக தஞ்சை இந்திய உணவு தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை கழகத்தில் இன்று உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியினை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தொடங்கி வைத்தார். இதில் இயற்கை வேளாண்மை சார்ந்த உணவுப் பொருட்கள் உயிர் உரங்கள் அதன் பலன்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இதில் இயற்கை வேளாண்மை சார்ந்த இயற்கை உரக் நிறுவனங்கள் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டு எப்படி விற்பனை செய்வது என்பன உள்ளிட்ட விளக்கும் வகையில் கண்காட்சி நடைபெற்று கொண்டுள்ளது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு இதன் பலன்கள் குறித்து கேட்டறிந்தனர்
மேலும் விவசாயிகளுக்கான கருத்தரங்கமும் நடைபெற்றது. நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்ய வேண்டும் எதிர்கால சந்ததியிற்கு நஞ்சில்லாத மண்வளத்தை கொண்டு சேர்க்க இக்கண்காட்சி பயனுள்ள வகையில் கண்காட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.