By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    மியான்மரில் உள்நாட்டு போர்: ராணுவத்தின் கை மீண்டும் ஓங்குகிறது
    1 Min Read
    சிறுவனை கடத்திய வழக்கில் கனடாவில் இந்தியருக்கு சிறை தண்டனை
    1 Min Read
    ஆட்கள் நீக்கமா? இன்போசிஸ் தலைமை அதிகாரி கொடுத்த விளக்கம்
    1 Min Read
    ஹார்முஸ் நீரிணையை திறக்க என்ன செய்யலாம்… அதிபர் டிரம்ப்பின் அடுத்த திட்டம்
    1 Min Read
    ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது… அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மகனை மார்பில் அணைத்தப்படியே இறந்து கிடந்த தாய்
    1 Min Read
    சத்தான ஹோம் மேட் செர்லாக் பவுடர் தயாரிப்பது எப்படி?
    1 Min Read
    லாரி மீது கார் மோதி விபத்தில் தெலுங்கானாவில் 6 பேர் உயிரிழப்பு
    1 Min Read
    சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை உயர்வு… மத்திய அரசு அதிரடி
    1 Min Read
    திருமண இசை கச்சேரியால் 140 கோழிகள் பலி… போலீசில் புகார்
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்படுகின்றன
    1 Min Read
    ஆரோக்கியம் அளிக்கும் வாழைப்பூ அடை தோசை செய்து அசத்துங்கள்
    1 Min Read
    அசத்தலான சுவையில் ஐஸ் டீ செய்வது எப்படி?
    1 Min Read
    தஞ்சாவூர் 12 மையங்களில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள்
    1 Min Read
    மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 90.18 லட்சம் பேர் பயணம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தேசிய வாக்காளர் தினவிழா… புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்கல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > தேசிய வாக்காளர் தினவிழா… புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்கல்
தமிழகம்

தேசிய வாக்காளர் தினவிழா… புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்கல்

Nagaraj
Last updated: January 26, 2026 5:36 am
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: தேசிய வாக்காளர் தின விழாவில் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டையை தலைமை தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக் நேற்று வழங்கினார்.

இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். தேசிய வாக்காளர் தின விழாவில் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டையை தலைமை தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக் நேற்று வழங்கினார்.

இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்திய தேர்தல் ஆணையம் 1950-ம் ஆண்டு, ஜன.25-ம் தேதி நிறுவப்பட்டது. இந்த ஆணையம் நிறுவப்பட்டு அதன் வைர விழாவை கொண்டாடிய 2011-ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் ஜன.25-ம் தேதி முதல் தேசியவாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் சார்பில் மாநில அளவிலான 16-வது தேசிய வாக்காளர் தினவிழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில், இந்திய தலைமை தேர்தல் ஆணையரின் உரைகாணொலி வாயிலாக ஒளிபரப்புசெய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் வாக்காளர் தின உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் 1000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள்பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு குடவோலை முறை இருந்துள்ளது. அத்தகைய சிறப்புமிக்க வரலாற்றைக் கொண்ட நாம் அனைவரும் தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயகத்துக்கு முக்கியமானது.

இந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் முழக்கமாக “எனது இந்தியா, எனது வாக்கு” என்றுள்ளதை நாம் ஒவ்வொருவரும் பின்பற்றி சிறந்த ஜனநாயகத்துக்கான நமது பங்களிப்பை செலுத்த வேண்டும். 18 வயது நிறைவடைந்தவர்கள் புதிய வாக்காளர்களாக சேர்ந்து, வாக்களிப்பது அவசியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து, தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள், பாராட்டுச்சான்றிதழ் மற்றும் கேடயங்களையும் முதல்முறை மற்றும் புதிய வாக்காளர்களுக்கான புதிய வாக்காளர் அடையாள அட்டைகளையும் அர்ச்சனா பட்நாயக் வழங்கினார்.

பின்னர், சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை குறித்த விழிப்புணர்வுக்கான நடமாடும் வாகனத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் க.கற்பகம், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) நா.பூஷ்ணாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

You Might Also Like

நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்படுகின்றன

ஆரோக்கியம் அளிக்கும் வாழைப்பூ அடை தோசை செய்து அசத்துங்கள்

அசத்தலான சுவையில் ஐஸ் டீ செய்வது எப்படி?

தஞ்சாவூர் 12 மையங்களில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள்

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 90.18 லட்சம் பேர் பயணம்

TAGGED:ChennaiDemonstrationElectronic VotingVoters' Dayசெயல்விளக்கம்சென்னைபங்கேற்புமின்னணு வாக்குப்பதிவுவாக்காளர் தினம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்படுகின்றன

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?