இங்கிலாந்து: இங்கிலாந்து கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண் ஒருவர் குழந்தை பெற்றுள்ளார்.
இங்கிலாந்தில், இறந்து போன பெண்ணிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட கருப்பை மூலம், பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கிரேஸ் பெல் என்ற பெண்ணுக்கு வளர்ச்சியடையாத கருப்பை இருந்ததால், அவரால் கருத்தரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, 2024-ஆம் ஆண்டு, கருப்பை தானமாகப் பெறப்பட்டு, கிரேஸ் பெல்லின் உடலில் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.
பின்னர், கருவுறுதல் சிகிச்சையை மேற்கொண்ட கிரேஸ் பெல்லுக்கு, லண்டனில் உள்ள குயின் சார்லோட் மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
ஹியூகோ எனப் பெயரிடப்பட்ட அந்த ஆண் குழந்தை, கருப்பை மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் இங்கிலாந்தில் பிறந்த முதல் குழந்தை என்ற பெருமையைப் பெற்றுள்ளது.