தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சரபேந்திர ராஜன்பட்டினம் ஊராட்சி மனோராவில், கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்க பணிகள் துவங்கப்பட உள்ளது.
இதையொட்டி, மீனவர்கள், மீனவர் சங்கப் பிரதிநிதிகள், கிராம பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி தலைமை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
இக்கூட்டத்தில், சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்திரன், மனோகரன், ஓம்கார் பவுண்டேஷன் இயக்குநர் பாலாஜி, வனச்சரக அலுவலர் பிரவீன், வனவர்கள் ரதி பாரதி, ராஜ்குமார், காவல்துறை உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம், வனப்பாதுகாவலர்கள், மீனவர் சங்கப் பிரதிநிதி சின்னையன் மற்றும் மீனவர்கள், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், “கடல்பசு பாதுகாப்பு மையம் குறித்து அச்சம் தெரிவித்த மீனவர்கள் பாதுகாப்பு மையம் அமைக்கும் போது, மீனவர்களுக்கு இடையூறு இல்லாமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மீனவர் குடும்பங்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும். பொதுக்கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்” என மீனவ மக்கள் கேட்டுக் கொண்டனர்.
பொதுமக்கள் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, மீனவர்கள், பொதுமக்களுக்கு இடையூறு இல்லார வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
மீனவர்கள், கருத்துக்கேட்பு, பொதுமக்கள், திட்டம், மனோரா, அரசு,