ரஷ்யா: உக்ரைன் தொடர்ந்து ரஷ்யாவின் சுத்திகரிப்பு நிலையங்கள், எரிபொருள் கிடங்குகள் மற்றும் குழாய் வழித்தடங்கள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு நவம்பர் மாத இறுதி வரை தற்காலிக தடை விதித்து ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.
சமீப வாரங்களில் ரஷ்ய எரிசக்தி கட்டமைப்புகள் மீது உக்ரைன் மேற்கொண்ட தாக்குதல்கள் பல்வேறு இடங்களில் தீவிபத்துகளை ஏற்படுத்தியுள்ளன. இதன் தாக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக உள்நாட்டு எரிபொருள் சந்தையில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்களின் கீழ் நடைபெறும் விநியோகங்களுக்கு மட்டும் இந்த தடை பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.