நாமக்கல்: கட்சிகளின் கொடி நிற பார்டரில் வேட்டி, சேலை, துண்டு தயாரிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளால் ஜவுளியை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாம்.
தேர்தலை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் அரசியல் கட்சிகளின் கொடி நிற பார்டர் கொண்ட வேட்டி சேலைகள் மற்றும் துண்டு தயாரிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஜவுளி உற்பத்தி அதிகரித்தாலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளால் ஜவுளியை மொத்த வியாபாரிகளுக்கு கொண்டுச் சேர்ப்பதில் சிரமம் உள்ளதாக விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதனால் உற்பத்தி செய்யும் வேட்டி, சேலைகளை எவ்வாறு ஜவுளி நிறுவனங்களுக்கு அனுப்புவது என்று தெரியாமல் தவித்து வருகின்றனராம்.