சென்னை: திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் தவாக சார்பில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 2 தொகுதிகள் கோரப்பட்டதாகவும், ஆனால் திமுக ஒரு தொகுதி மட்டுமே கொடுக்க முன் வந்ததாகவும் தெரிகிறது. மேலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை இன்னும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைக்கு திமுக அழைக்கவில்லை என்றும் இதனால் அக்கட்சி திமுக மீது அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று சென்னை விருகம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகுவதாக அறிவித்துள்ளார்.