சென்னை: அமமுக வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியில், அதிமுக 167, பாஜக 26, பாமக 18, அமமுக 11, தமாகா 5, புதிய நீதிக்கட்சி 2, இந்திய ஜனநாயக கட்சி 2, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1, புரட்சி பாரதம் 1, சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் 1 என 234 தொகுதிகளிலும் களம் காண்கிறது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர்கள் பட்டியலை டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அதன்படி,
சைதாப்பேட்டை – செந்தமிழன், திருப்பத்தூர் – ஞானசேகரன், பூவிருந்தவல்லி – ஏழுமலை, நாங்குநேரி – இசக்கிமுத்து, ஒட்டப்பிடாரம் – சுந்தர்ராஜன், பெரியகுளம் – கதிர்காமு, மடத்துக்குளம் – சண்முகவேலு, திருவையாறு – வேலுகார்த்திகேயன், காரைக்குடி – தேர்போகி பாண்டி, திருச்சி மேற்கு – தொட்டியம் ராஜசேகரன், மன்னார்குடி – எஸ்.காமராஜ் ஆகியோர் அமமுக சார்பில் போட்டியிடுகின்றனர். இவ்வாறு பட்டியலை டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ளார்.