சென்னை: தவெக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னையில் போட்டியிடும் முக்கிய நிர்வாகிகள் விபரம். இதையடுத்து இன்று தவெக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்கின்றனர்.
த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தமிழக அரசியலில் களம் இறங்கி முதன் முதலாக தேர்தலை சந்திக்கிறது விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி. இக்கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.
234 தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை அதன் தலைவர் விஜய் இன்று அறிவித்தார். அதன்படி, த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
மற்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்: தியாகராயநகர்- புஸ்சி ஆனந்த், வில்லிவாக்கம்- ஆதவ் அர்ஜூனா, ஆர்.கே.நகர்- மரியவில்சன், மயிலாப்பூர்- வெங்கட்ரமணன், ஆயிரம் விளக்கு- ஜே.சி.டி.பிரபாகர், கோபிசெட்டிபாளையம்- செங்கோட்டையன், திருச்செங்கோடு- அருண்ராஜ், திருப்பரங்குன்றம்- நிர்மல்குமார், எழும்பூர்- ராஜ்மோகன் என அனைத்து வேட்பாளர்கள் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.