கோவை: ஊழல் என்பதே இனி நடந்து விடக்கூடாது என கண்காணித்து வருகிறோம். தூய ஆட்சி நடைபெற வேண்டும் என்பது தான் முதல்வரின் நோக்கம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கோவையில் அவர் அளித்த பேட்டி; இன்று தமிழகத்தில் ஒரு தூய்மையான ஆட்சி நடைபெற வேண்டும் என்பது தான் முதல்வரின் நோக்கம். தவறுகள் எங்கே நடைபெறுகின்றன என்று நீங்கள் சுட்டிக்காட்டுகிற போது அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதில் எந்த தயக்கமும் இருக்காது.
ஊழல் என்பதே இனி நடந்துவிடக்கூடாது என கண்காணித்து வருகிறோம். கவனம் செலுத்தி வருகிறோம். ஏதாவது ஒரு இடத்திலே அப்படிப்பட்ட நிலைமை இருக்குமானால் தகவல் தெரிவித்தால் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தவெக வளர்ச்சி இந்திய நாட்டின் வரலாற்றில், தமிழகத்தின் வரலாற்றில், ஒரு இயக்கம் தோன்றி இரண்டே ஆண்டுகாலத்தில் பணநாயகத்தை முறியடித்துவிட்டு, ஜனநாயகத்தை உருவாக்குவதற்கு முதல்வருக்கு மக்கள் ஓட்டளித்துள்ளனர்.
ஏழை, எளிய மக்களுக்கு பட்டாக்கள் கொடுப்பதில், பட்டாக்கள் மாறுதல் செய்வதில், கணினியில் தகவல்களை பதிவேற்றுவதில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால் நேரிடையாக என் கவனத்துக்கு கொண்டு வரலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.