தஞ்சாவூர்: பங்குனி உத்திரத்தையொட்டி தஞ்சை பர்மா காலனி அங்காள ஈஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விரதமிருந்து அங்காள ஈஸ்வரி அம்மனை வேண்டிக்கொண்டு தீ மிதித்தனர்
பால் காவடி, பறவை காவடி என காவடி எடுத்து சிவகங்கை பூங்காவிலிருந்து ஊர்வலமாக சென்ற பக்தர்கள் வரிசையாக தீ குண்டத்தில் இறங்கி பக்தியுடன் தீ மிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றியபின் ஆலயத்திற்கு சென்று அங்காள ஈஸ்வரி அம்மனை வழிபட்டனர்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.