வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோ அடுத்த மாதம் இந்தியா வருகிறார். இந்திய பயணத்தை மிகவும் ஆவலுடன் மார்கோ ரூபியோ எதிர்நோக்கி உள்ளார் என அமெரிக்க தூதர் செர்ஜியோ கார் தெரிவித்தார்.
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ளார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க தூதர் செர்ஜியோ காரை விக்ரம் மிஸ்ரி சந்தித்தார். அதைத் தொடர்ந்து அந்நாட்டு வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோவையும் சந்தித்துப் பேசினார்.
இருநாட்டு உறவுகள், கச்சா எண்ணெய் வினியோகம், எரிசக்தி, உள்நாட்டு ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோ அடுத்த மாதம் இந்தியா வருகிறார். இந்திய பயணத்தை மிகவும் ஆவலுடன் மார்கோ ரூபியோ எதிர்நோக்கி உள்ளார் என அமெரிக்க தூதர் செர்ஜியோ கார் தெரிவித்தார்.