By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானின் சட்டவிரோத எண்ணெய் வர்த்தகம்: புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா!
    1 Min Read
    சீனாவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
    0 Min Read
    டிரம்ப் போல தோற்றமளித்ததால் தப்பிய எருமை மாடு
    1 Min Read
    பாடகி கெனிஷாவுக்கு துபாய் நீதிமன்றம் ரூ. 1.30 லட்சம் அபராதம் விதிப்பு
    1 Min Read
    இலங்கையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: 3 சீனர்கள் கைது
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டம்
    1 Min Read
    ட்விஷா சர்மா மரணம்: மாமியாரை கைது செய்த சிபிஐ
    1 Min Read
    ஹேப்பி லேண்ட் பூங்காவில் ராட்டினம் முறிந்து விபத்து: 5 பேர் படுகாயம்
    1 Min Read
    நீட் மறுதேர்வை நேரடியாக கண்காணிக்கும் பிரதமர் அலுவலகம்!
    1 Min Read
    டெல்லியில் பலத்த மழை: 521 விமான சேவைகள் பாதிப்பு!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வாழ்க்கை சுமூகமாக நகர பெண்கள் எடுக்கும் முடிவுகள்
    1 Min Read
    35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள்
    1 Min Read
    குழந்தைகள் வளரும்போது அவர்களை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்
    1 Min Read
    உங்கள் கணவருடன் விவாதம் செய்யும் போது சண்டை வராமல் தடுப்பது எப்படி?
    1 Min Read
    கணவன்மார்களே மனைவியை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தமிழ்நாட்டு மக்களின் கடமை இது… விசிக திருமாவளவன் கூறியது எதற்காக?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > தமிழ்நாட்டு மக்களின் கடமை இது… விசிக திருமாவளவன் கூறியது எதற்காக?
அரசியல் செய்திகள்

தமிழ்நாட்டு மக்களின் கடமை இது… விசிக திருமாவளவன் கூறியது எதற்காக?

Nagaraj
Last updated: April 16, 2026 5:23 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை தமிழ்நாடு மக்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. இந்த மசோதா நிறைவேறினால் தென் மாநிலங்கள் முற்றிலுமாக அரசியல் செல்வாக்கை இழந்து விடும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தால் 2026 ஆம் ஆண்டுக்குப் பிறகான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2031 ஆம் ஆண்டில் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் பிறகு தொகுதி மறு சீரமைப்பு செய்யப்பட வேண்டும்.

ஆனால் இந்த சட்டத்துக்கு மாறாக இப்போதே தொகுதி மறுசீரமைப்புச் செய்வதற்கு பாஜக அரசு முயற்சிக்கிறது. அதற்கு அடிப்படையாக 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வைத்துக் கொள்ளலாம் என அது முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

நாடாளுமன்றத் தொகுதிகளை 850 ஆக உயர்த்தும்போது ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை உயரும். அது எதன் அடிப்படையில் உயர்த்தப்படும் என்பதை இதுவரை ஒன்றிய அரசு தெளிவாகக் கூறவில்லை.

பாஜக அமைச்சர்கள் சொல்வதையும், தற்போது வெளியாகியுள்ள சட்ட மசோதாக்களையும் பார்க்கும்போது 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் எனத் தெரிகிறது.

அவ்வாறு செய்தால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களும்; ஒடிசா, மேற்குவங்கம் முதலான மாநிலங்களும் கடுமையாகப் பாதிக்கப்படும். இந்த மாநிலங்களில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போது இருக்கும் விகிதத்தை விடக் குறையும். ஆனால் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் முதலான இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அதன் பின்னர் உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் ஒரு கட்சி அதிக எண்ணிக்கையில் இடங்களைக் கைப்பற்றினால் அது இந்தியாவையே ஆளக்கூடிய நிலை ஏற்படும். இதன் காரணமாக தென் மாநிலங்கள் முற்றிலுமாக அரசியல் செல்வாக்கை இழந்து விடும்.

இந்த ஆபத்தை கருதித்தான் தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பு மாநில அரசுகளோடு கலந்து ஆலோசிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் ஒன்றிய அரசை வலியுறுத்தி வந்தார்கள்.

தற்போதுள்ள விகிதத்திலேயே நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மாநிலத்திலும் உயர்த்தப்பட வேண்டும் என்றும், அதற்கு மக்கள் தொகையை அடிப்படையாகக் கொள்ளக்கூடாது என்றும் கூறி வந்தனர்.

ஆனால் அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு இப்போது தொகுதி மறு சீரமைப்பைச் செய்வதற்கு பாஜக அரசு முடிவு எடுத்திருக்கிறது. பாஜக அரசு தொகுதி மறு சீரமைப்பை மேற்கொண்டால் அதன் பின்னர் வடக்கு வாழும், தெற்கு தேயும் ஏற்கனவே வரி வருவாய்ப் பகிர்விலும், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்வதிலும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.

இப்போது தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைந்து போனால் அதன் பின்னர் தமிழ்நாட்டுக்கு எந்தவொரு மதிப்பும் இல்லாமல் போய்விடும். எனவே இந்த கொடிய முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை தமிழ்நாட்டில் உள்ள மக்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

ஒன்றிய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து நாடு முழுவதும் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் என மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

அதை விடுதலைச் சிறுத்தைகள் வழிமொழிகிறது தொகுதி மறு சீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 16 4 2025 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் தமிழ்நாடு முழுவதும் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் கட்சி அலுவலகத்திலும் தமது விடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You Might Also Like

நதிநீர் இணைப்பு காலத்தின் கட்டாயம்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

வைகோ விளக்கம்: அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைப்பில் ‘குதிரை பேரம்’ குற்றச்சாட்டை ஏற்கவில்லை

ஊழலற்ற தூய்மையான ஆட்சிதான் முதல்வரின் நோக்கம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

‘ஜனநாயகன்’ சமூக கொண்டாட்டமாக வரும் – அமைச்சர் ராஜ்மோகன்

காசாவில் ராணுவ கட்டுப்பாட்டை விரிவுப்படுத்தும் இஸ்ரேல்

TAGGED:BJP GovernmentCentral GovernmentConstituency realignmentNorth livesSchemesSouth fadestax revenue sharingதிட்டங்கள்தெற்கு தேயும்தொகுதி மறு சீரமைப்புபாஜக அரசுமத்திய அரசுவடக்கு வாழும்வரி வருவாய்ப் பகிர்வு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

நதிநீர் இணைப்பு காலத்தின் கட்டாயம்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?