சென்னை: ஒரு மணி நேரத்துக்கு தூக்கத்தை இழந்தால், அதனை ஈடுகட்ட சுமார் 4 நாள்கள் ஆகுமாம் என்று நடிகை திரிஷா பதிவிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் விவாகரத்து பிரச்னைக்கு இடையே விஜய்-திரிஷா ஒன்றாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டது முதல் வாக்கு செலுத்திவிட்டு விஜய் பட பாடலை பதிவிட்டது வரை நடிகை திரிஷாவின் ஒவ்வொரு சமூகவலைதள பதிவும் ரசிகர்களால் கவனம் பெற்று வருகிறது.
அந்தவகையில் தற்போது பதிவிட்டிருக்கும் திரிஷாவின் பதிவும் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டிருக்கும் ஸ்டோரியில், “ஒரு மணி நேரத்துக்கு தூக்கத்தை இழந்தால், அதனை ஈடுகட்ட சுமார் 4 நாள்கள் ஆகுமாம், அப்படியென்றால் கணக்குப்படி 2062ல் தான் நன்றாக உணர்வேன் போல” என்று பதிவிட்டுள்ளார்.
சூர்யா மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் கருப்பு திரைப்படம் மே 14ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.