சென்னை: விஜய் டிவியில் மறு ஒளிபரப்பாகும் சீரியல்களின் நேரம் மாற்றத்திற்கு உள்ளாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீரியல்கள், படங்கள், ரியாலிட்டி ஷோக்கள் என நிறைய விஷயங்கள் ஒளிபரப்பாக மக்களும் ஆர்வமாக பார்க்கிறார்கள்.
வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரைக்கு மக்களிடம் அதிக மவுசு இருப்பதால் நிறைய கலைஞர்கள் சீரியல்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
சன், விஜய், ஜீ தமிழ் என எல்லா தொலைக்காட்சிகளிலும் டிஆர்பியில் குறைந்த சீரியல்கள் முடிவுக்கு வருவதும், புத்தம் புது சீரியல்கள் களமிறங்குவதும் வழக்கமாக உள்ளது.
விஜய் டிவியில் மதிய வேளையில் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்படும் தொடர்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.
அதன்படி சிறகடிக்க ஆசை- காலை 11.30
அய்யனார் துணை- மதியம் 12
அழகே அழகு- 12.30
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2- 1
தாய்மாமன்- 3.30 இவ்வாறு சீரியல்கள் நேரம் மாறியுள்ளதாம்.