சென்னை: வலியை குறைக்கும் அரத்தை… அடிபட்ட வீக்கம், வலி குறைய அரத்தையை வெந்நீர் விட்டு அரைத்து பசைபோல செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும்.
பல்வலி, ஈறுவீக்கம் குணமாக அரத்தைத் தூளை சம அளவு பற்பொடியுடன் கலந்து காலை, மாலை வேளைகளில் பல் துலக்கி வர வேண்டும். சித்தரத்தை என்கிற வகையும் அரத்தையில் உண்டு. சிற்றரத்தை என்றும் கூறப்படும். இதன் வேர்க்கிழங்கும் நாட்டு மருந்துக் கடைகளில் காய்ந்த நிலையில் கிடைக்கும். இது சீனாவில் பெருமளவு வளர்க்கப்படுகின்றது.
இதற்கு அரத்தையைவிட அதிக மணமும் காரச்சுவையும் உண்டு. இதனுடைய மருத்துவப் பயன்களுக்காக வங்காள தேசத்திலும், வட இந்தியாவிலும் பெருமளவு வணிக ரீதியாக பயிர் செய்யப்படுகின்றது.