தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ஊமத்தநாடு ஊராட்சிக்கு உட்பட்ட பெத்தனாச்சிவயல் குடியிருப்பு பகுதியில், பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் இடைநின்ற பள்ளி மாணவர்கள் குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
இக் கணக்கெடுப்பில் தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேபி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) சஞ்சய், உதவி திட்ட அலுவலர் மாரிமுத்து, புள்ளியியல் அலுவலர் ராஜி, ட்ரினிடி தன்னார்வ தொண்டு நிறுவனம் பாஸ்கர், வட்டாரக் கல்வி அலுவலர் ராமமூர்த்தி, பட்டுக்கோட்டை வட்டார கல்வி அலுவலர்கள் செல்வகுமாரி, மீனா சுந்தரி, ஆசிரியர் பயிற்றுநர் சரவணன் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு ஆசிரியை நாகூர் மாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கணக்கெடுப்பில் மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்து, கல்வியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. மாணவர்களை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பி வைப்பதாக பெற்றோர்கள் உறுதி கூறினர். மாணவர்களும் தினந்தோறும் பள்ளிக்கு வருவதாக தெரிவித்தனர்.