புதுடில்லி: நேரடியாக கண்காணிக்க முடிவு… நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை தொடர்ந்து, மறுதேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிரதமர் அலுவலகம் நேரடியாக கண்காணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, ஜூன் 21ஆம் தேதி மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் பங்கேற்றனர்.
வினாத்தாள் தயாரிப்பு, அச்சிடுதல், பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் தேர்வு மையங்களுக்கு விநியோகம் வரை ஒவ்வொரு கட்டத்தையும் பிரதமர் அலுவலகம் நேரடியாக கண்காணிக்க உள்ளது.
இதற்காக தொழில்நுட்பக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.