சென்னை: சூர்யாவுடனான சந்திப்பு குறித்து நடிகை அனகா மனம் திறந்து பேசியுள்ளார்.
சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள படம் ’கருப்பு’. இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான இப்படம் இன்று வரை வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில், திரிஷா, சுவாசிகா மற்றும் ஷிவதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில், மலையாள சினிமாவில்ாவின் இளம் நடிகையான அனகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அனகா, கருப்பு படத்திற்கு முன்பாக சூர்யாவுடனான சந்திப்பு குறித்து மனம் திறந்து பேசியிருந்தார். அதவது, 2023 ஆம் ஆண்டு ’காதல்; தி கோர்’ படம் வெளியானது. மம்மூட்டி மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான இப்படத்தில் அனகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, சூர்யா ஒரு முறை படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றிருந்தார். ஆனால், அன்று எனக்கு படப்பிடிப்பு இல்லாததால் நான் படப்பிடிப்பு தளத்திற்கு வரவில்லை என்று அனகா கூறியிருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ எனக்கு அன்று படப்பிடிப்பு இல்லாததால் நான் வீட்டிலேயே இருந்தேன். இருந்தாலும், எனது உதவியாளர்கள் எனக்கு போன் செய்து, இன்று வீடியோ கால் சூட் இருப்பதாகக் கூறினார்கள். அதனால், நானும் வீடியோ காலில் வந்தேன். சற்று நேரத்தில் அந்த வீடியோ கால் சூட் முடிந்தது.
உடனே மம்மூட்டி சார் நான் இன்னும் லைன்ல தான் இருக்கேனான்னு கேட்டுகிட்டே, ஜோதிகா மேடம் கிட்ட போனை கொடுத்தார். அடுத்த நிமிடம் எனக்கு முன்னாடி சூர்யா சார் நின்னுட்டு இருந்தாரு. என் வாழ்க்கையில மறக்க முடியாத தருணம் அது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.