புதுடெல்லி: இந்திய விமானப்படையில் நிலவும் போர் விமான பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், மேலும் 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் செயல்முறையை இந்தியா தொடங்கியுள்ளது.
சுமார் ரூ.3.25 லட்சம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா 200-க்கும் மேற்பட்ட ரஃபேல் விமானங்களை பெற்றிருக்கும் நிலை உருவாகியுள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் மற்றும் இந்திய நிறுவனம் இணைந்து சுமார் 90 முதல் 94 விமானங்களை இந்தியாவிலேயே தயாரிக்க உள்ளன.
இதன் மூலம் இந்திய விமானப்படையின் போர் திறன் மேலும் வலுப்பெறும் என பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.