சென்னை : தேர்தலுக்கு முன்பே ஆதவ் அர்ஜூனாவுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக அவதூறு பரப்புகின்றனர். என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: என்னை விமர்சனம் செய்பவர்கள் தான் தடுமாறுகிறார்கள், நான் தடுமாறவில்லை.
தேர்தலுக்கு முன்பே ஆதவ் அர்ஜூனாவுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக அவதூறு பரப்புகின்றனர். எப்போது முடிவு எடுக்க வேண்டும், எந்த முடிவு எடுக்க வேண்டும் என்று 35 ஆண்டுகளாக கட்சி நடத்தி வரும் எனக்கு தெரியும்.
கூட்டணி கட்சி தலைவர்களின் கருத்தை மனதில் கொண்டு தான் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் நான் போட்டியிடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.